மாநில செய்திகள்

தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் வேலைவாய்ப்பை நாம் இழக்கிறோம் என்பதுதான் உண்மை- தமிழிசை + "||" + The truth is that we lose jobs in Tamil Nadu with a series of struggles - TamilisaiSoundararajan

தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் வேலைவாய்ப்பை நாம் இழக்கிறோம் என்பதுதான் உண்மை- தமிழிசை

தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் வேலைவாய்ப்பை நாம் இழக்கிறோம் என்பதுதான் உண்மை- தமிழிசை
தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடத்துவதால் தான் நாம் வேலைவாய்ப்பை இழந்து வருகிறோம் என்று தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Protest
சென்னை 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினா் தங்களுடைய கருத்துகளையும் இரங்களையும் தெரிவித்து வந்தனா்.

இதைத்தொடா்ந்து தமிழக பாஜக தலைவா் தமிழிசை சவுந்தராஜன் தற்போது பேட்டி அளித்துள்ளார். அவா் கூறுகையில்,

“தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் வேலைவாய்ப்பை நாம் இழக்கிறோம் என்பதுதான் உண்மை” என்று தமிழிசை கூறியுள்ளார். மேலும் சமூகவிரோதிகளால்தான் போராட்டம் கலவரமானது என கூறினால் எங்களை சமூகவிரோதி போல் பார்க்கிறார்கள் என்று அவா் தெரிவித்துள்ளார்.