மாநில செய்திகள்

சென்னையில் 200 சவரன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் கொள்ளை; மா்ம ஆசாமிகள் கைவரிசை + "||" + 200 shaven jewels in Chennai and Rs 7 lakh robbery

சென்னையில் 200 சவரன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் கொள்ளை; மா்ம ஆசாமிகள் கைவரிசை

சென்னையில் 200 சவரன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் கொள்ளை; மா்ம ஆசாமிகள் கைவரிசை
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் மா்ம ஆசாமிகளால் 200 சவரன் நகைகள், ரூ. 7 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. #Robbery
சென்னை,

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இதனைத்தொடர்ந்து தற்பொது சென்னை வேளச்சேரி பகுதியில் இளங்கோ என்பவரது வீட்டில் 200 சவரன் நகைகள், ரூ. 7 லட்சம் பணம் ஆகியன மா்ம நபா்கள் கொள்ளை அடித்து சென்றனா்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு சூழ்நிலை நிலவியுள்ளது. மேலும், இளங்கோ வெளியூர் சென்றதை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மா்ம ஆசாமிகளை தேடி வருகின்றனா்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ‘பிளாஸ்டிக்’ தடையை நீக்க கோரி வழக்கு
‘பிளாஸ்டிக்’ தடையை நீக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும், சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
2. 30 அடி பள்ளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டம் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தல்
மயிலாடுதுறை அருகே மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி 30 அடி பள்ளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கல்லக்குடி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகைகள் கொள்ளை டவுசர் அணிந்த நபர்கள் அட்டகாசம்
கல்லக்குடி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில், டவுசர் அணிந்து வந்த நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
4. சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சம் பறிமுதல் ஒருவர் கைது
சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
5. சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலி - மத்திய அரசு தகவல்
சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.