மாநில செய்திகள்

இருவேறு இடங்களில் 10-ம் வகுப்பு மாணவன், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் பரிதாபம் + "||" + In two places The 10th grade student, the student committed suicide by hanging herself

இருவேறு இடங்களில் 10-ம் வகுப்பு மாணவன், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் பரிதாபம்

இருவேறு இடங்களில்
10-ம் வகுப்பு மாணவன், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் பரிதாபம்
இருவேறு இடங்களில் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் 10-ம் வகுப்பு மாணவன், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
நாசிக், 

இருவேறு இடங்களில் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் 10-ம் வகுப்பு மாணவன், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

தேர்வு முடிவுகள்

நாசிக், பஞ்சவட்டி பகுதியில் உள்ள புலே நகரை சேர்ந்த 16 வயது மாணவி சக்தி ஏக்நாத் பந்த்குலே. இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், 56 சதவீத மதிப்பெண்கள் எடுத்து சக்தி ஏக்நாத் பந்த்குலே தேர்ச்சி பெற்றிருந்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் கவலையில் மனமுடைந்தார்.

இதை வீட்டில் இருப்பவர்களிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டதாக தெரிகிறது.

மாணவி தற்கொலை

இந்தநிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வேளையில் வீட்டில் உள்ள அறையில் சென்று தூக்குபோட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாணவர்தற்கொலை

சாங்கிலி கஜானன் காலனி பகுதியை சேர்ந்தவர் கோவில்கர் (வயது15). இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவில், கோவில்கர் 53 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து இருந்தார். தேர்ச்சி பெற்றாலும் அவர் எதிர்பார்த்த மார்க் கிடைக்காததால் மனமுைடந்தார். இந்தநிலையில், திடீரென கோவில்கர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.