தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம்: 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது


தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம்: 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 Jun 2018 6:14 PM GMT (Updated: 10 Jun 2018 6:14 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக மக்கள் அதிகார அமைப்பைச் சேர்ந்த 6 பேர் ஏற்கனவே பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 6 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மக்கள் அதிகார அமைப்பைச் சேர்ந்த கலில் ரஹ்மான், முகமது இஸ்ரப், முகமது யூனிஸ், சரவணன், வேல்முருகன், சோட்டையன் ஆகிய 6 பேரும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story