மாநில செய்திகள்

7 தமிழர்களை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + 7 release the Tamils Making the Cabinet The resolution needs to be fulfilled Dr. Ramadas asserted to the Government of Tamil Nadu

7 தமிழர்களை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

7 தமிழர்களை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் இழைக்காத பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 11-ந் தேதியுடன் (இன்று) 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கைது செய்யப்பட்டு இரு ஆயுள் தண்டனை காலங்கள் முடிவடைந்த பிறகும், ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

7 தமிழர்களின் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 4½ ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மத்திய அரசு சார்பில் கூறப்படும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுவதும், பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் 27 ஆண்டுகளைக் கடந்தும் அப்பாவிகளின் சிறைவாசம் தொடர்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலைசெய்ய எந்தத் தடையும் இல்லை.

ஆனால், யாருக்கோ அஞ்சி அந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்படும் துரோகமாகும். தமிழர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நீதிகிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி 161-வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி அவர்கள் விடுதலையாவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசுக்கு 15-வது நிதிக்குழு பாராட்டு
நிதி பற்றாக்குறை மற்றும் கடன் விகிதாச்சாரத்தை தமிழக அரசு மிக சிறப்பாக கையாள்கிறது என்று 15-வது நிதிக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
2. அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: டாக்டர் ராமதாஸ்-விஜயகாந்த் வாழ்த்து
தி.மு.க. தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4. கிரீமிலேயர் முறையை ஒழிக்க உடனே நடவடிக்கை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை ஒழிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5. அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.