மாநில செய்திகள்

சட்டசபையில்: நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் + "||" + Assembly Highway, public service fields Subsidy demand debate

சட்டசபையில்: நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்

சட்டசபையில்: நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்
சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கிறார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக கடந்த மாதம் (மே) 29-ந் தேதி சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. இதுவரை 9 நாட்கள் நடைபெற்றுள்ள கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.


இந்த நிலையில், 10-வது நாள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். இறுதியாக, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மேலும், நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை, பொதுப் பணித்துறையைச் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.

வரும் 26-ந் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. வாஜ்பாய், அனந்தகுமாா், ஜாபர்ஷெரீப், அம்பரீஷ் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அனந்த குமார், ஜாபர்ஷெரீப், அம்பரீசுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக் கப்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
2. ஆமை வேகத்தில் மெட்ரோ ரெயில் பணி: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
மெட்ரோ ரெயில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
3. சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறக்கப்படும் பாராட்டு விழாவில், முதல்-அமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறக்கப்படும் என்று பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
4. பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை - பொதுமக்கள் கோரிக்கை
பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
5. நாகர்கோவில்–திருவனந்தபுரம் இடையே குண்டும் –குழியுமான தேசிய நெடுஞ்சாலை; வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில்– திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும்–குழியுமாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.