மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வானிலை மையம் தகவல் + "||" + In TamilNadu In a few places today Heavy rainfall Weather Center Information

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,

கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சில மாவட்டங்களில் நன்றாக பெய்தது. சில மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அது கர்நாடகம், கேரளா முழுவதும், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு பற்றிய விவரம் வருமாறு.

சின்னகல்லாறு 19 செ.மீ., வால்பாறை 17 செ.மீ., பாபநாசம் 12 செ.மீ., பெரியாறு 9 செ.மீ., தேவலா 7 செ.மீ., கூடலூர் பஜார், குந்தாபாலம் தலா 6 செ.மீ., பேச்சிப்பாறை, பொள்ளாச்சி தலா 5 செ.மீ., நடுவட்டம், செங்கோட்டை, மைலாடி, குளச்சல் தலா 4 செ.மீ., ஊட்டி, நாகர்கோவில், மணிமுத்தாறு, தென்காசி, தக்கலை தலா 3 செ.மீ., குழித்துறை, ராதாபுரம், கன்னியாகுமரி, இரணியல் தலா 2 செ.மீ., ஆயிக்குடி, பூதப்பாண்டி, கேத்தி, கூடலூர், அம்பாசமுத்திரம், பெண்ணாகரம் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுகிறது தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தகவல்
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தரேஸ் அகமது தெரிவித்தார்.
2. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவது எப்போது? தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி அளித்துள்ளார்.
3. 34 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு அனுமதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ரூ.14 ஆயிரம் கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்குவது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் 34 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
4. தமிழகத்தில் சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் எத்தனை பேர்? அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. முடக்கவோ, அடக்கவோ முடியாது தமிழகத்தில் பா.ஜ.க. விஸ்வரூபம் எடுக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் தமிழிசை பதில்
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-