மாநில செய்திகள்

இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு டாக்டர் பட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் + "||" + ISRO chief K.Sivan has a doctorate Governor Panwarilal Purohit presented

இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு டாக்டர் பட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்

இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு டாக்டர் பட்டம்
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இஸ்ரோ தலைவர் கே.சிவன், பாரதீய நபிக்கிய வித்யுட் நிகாம் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கல்லோல் ராய் ஆகியோருக்கு தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைக்கு நடிகர் பாண்டியராஜனுக்கும், பல்வேறு துறைகளில் ஆய்வு செய்த 69 பேருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 217 பேர் பட்டங்கள் பெற்றனர். விழாவில் பல்கலைக்கழக திட்டம் மற்றும் வளர்ச்சிக்கான துணைத்தலைவர் ஜோதி முருகன், கல்விக்கான துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், பதிவாளர் வீரமணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.