மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் - முதல்வர் எடப்பாடி


மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் - முதல்வர் எடப்பாடி
x
தினத்தந்தி 12 Jun 2018 7:32 AM GMT (Updated: 12 Jun 2018 7:32 AM GMT)

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami

சென்னை

110-வது விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளின்  முக்கிய விவரம் வருமாறு:-

* அணைகளில் நீர் ஆவியாவதை தடுக்க ரூ.1,125 கோடியில் மிதக்கும் சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

* 10 இடங்களில் 110 கிலோவாட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

* சென்னையில் 6 இடங்களில் ரூ.932 கோடியில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

* சேலம், எடப்பாடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

* புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்படும்.

* ஊரகப்பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்க ரூ.100 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

* ரூ.87 கோடியில 1,000 அங்கன்வாடிகள் அமைக்கப்படும்.

* ஊரகப் பகுதியில் 2.50 லட்சம் உரிஞ்சுக்குழிகள் அமைக்கப்படும்.

* 51 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளில் ரூ.217 கோடியில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

* மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி மன்றங்களில் 1,350 கி.மீ., நீளத்திற்கு 1000 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* ரூ.192.80 கோடியில் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும். 

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Next Story