மாநில செய்திகள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Disproportionate wealth Court orders DVAC probe against TN minister KT Rajendra Balaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #RajendraBalaji
மதுரை,

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக அமைச்சராக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னுடைய வருமானம் வரி வரம்பிற்குள் இல்லை எனவும், ரூ.18.88 லட்சத்திற்கு அசையும் சொத்தும், ரூ.19.11 லட்சத்திற்கு அசையா சொத்தும் உள்ளதாகவும் கூறியிருந்தார்.

அமைச்சரான பின்னர் பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியுள்ளார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்றது. இன்று விசாரணை நடைபெற்ற போது ஐகோர்ட்டு 
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டது. முதல் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் ஆகஸ்ட் 3-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்டு, எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.