மாநில செய்திகள்

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க காவலர்களுக்கு 2 ஷிப்ட் முறை - ஆணையர் விஸ்வநாதன் + "||" + Prevent accusations in Chennai 2 shift times for guards Commissioner Vishwanathan

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க காவலர்களுக்கு 2 ஷிப்ட் முறை - ஆணையர் விஸ்வநாதன்

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க காவலர்களுக்கு 2 ஷிப்ட் முறை - ஆணையர் விஸ்வநாதன்
இரவு நேரங்களில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்க உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், எஸ்.ஐக்கு கீழ் உள்ள காவலர்களுக்கு 2 ஷிப்ட் முறை அறிமுகம். #AKViswanathan
சென்னை

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க ஆணையர் விஸ்வநாதன் புதிய முறையை நடைமுறைப்படுத்தினார் 

இரவு நேரங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இரவில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையடுத்து, இரவு நேரங்களில் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் 2 ஷிஃப்ட்களில் பணியாற்றும் நடைமுறையை இன்று அறிமுகப்படுத்தினார். இந்த நடைமுறை, வரும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதாவது, சென்னை மாநகரில் உள்ள உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், காவல்துறை துணை ஆய்வாளர் ஆகியோரின் கீழ் உள்ள காவலர்கள் இரவு நேரங்களில் 2 ஷிஃப்ட் முறையில் பணியாற்றுவார்கள்.

மேலும், தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்துக்கு தலா 3 ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் இரண்டு ஷிஃப்ட்களில் பணியாற்றவிருக்கும் காவல்துறையினர், இரவு 10 மணி முதல் 4 மணி வரை ஒரு ஷிப்ட் நேரத்திலும், அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை இரண்டாவது ஷிப்ட் நேரத்திலும் பணியாற்றுவார்கள்.

அதேபோல வழக்கமான இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.