18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை காலை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது


18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை காலை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது
x
தினத்தந்தி 13 Jun 2018 1:14 PM GMT (Updated: 13 Jun 2018 1:14 PM GMT)

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது. #MadrasHC

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கவர்னரிடம் புகார் கொடுத்ததால், அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

 வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

Next Story