மாநில செய்திகள்

சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை + "||" + Tamil Nadu MLAs disqualification case verdict live

சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை
சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதல்-அமைச்சர் பழனிசாமி திடீர் ஆலோசனையை மேற்கொண்டார். #MLAsDisqualification
சென்னை,

தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கும் நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதல்-அமைச்சர் பழனிசாமி திடீர் ஆலோசனையை மேற்கொண்டார். ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் பங்கேற்றார். உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வந்து உள்ளனர். 

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் ஆகியோர் வந்து உள்ளனர். தலைமை நீதிபதி அறை, வழக்கறிஞர்கள் அமரும் பிரிவில் கூட்டம் நிரம்பியுள்ளது.