18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 14 Jun 2018 11:07 AM GMT (Updated: 14 Jun 2018 11:07 AM GMT)

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #MLAsDisqualification

சென்னை,

18 எம்.எல்.ஏக்கள் வழக்கு கடந்த 9 மாதங்களாக நீடித்து வந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் வழக்கு மேலும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் தீர்ப்பு அளித்த பின்னர் தான் இந்த வழக்கு முடிவுக்கு வரும். ஏற்கனவே தீர்ப்பு காலதாமதமாகி உள்ளதாக கருதி வந்த நிலையில், மேலும் கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிழைக்குமா?, பிழைக்காதா என்பது பிறகே தெரியும் - தி.க. தலைவர் கி.வீரமணி.

3வது நீதிபதிக்கு மாற்றப்பட்ட வழக்கில், தீர்ப்பு காலக்கெடுவிற்குள் வெளிவர வேண்டும் - தமாகா தலைவர் வாசன்.

3வது நீதிபதிக்கு மாற்றபட்டுள்ள தீர்ப்பில், உடனே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். 3 வது நீதிபதி விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும்.  - திருமாவளவன்.

தினகரன் எம்.எல்.ஏ கூறியிருப்பதாவது:

8 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.  புதுச்சேரி சபாநாயகர் எடுத்த நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பு, தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பு என எப்படி மாறுபட்டு வரும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு உள்ளோம், எந்த தீர்ப்பு வந்தாலும் 18 பேரும் என்னுடன் தான் இருப்பார்கள்.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஊசிவெடி - தமிழிசை 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரன் அணிக்கு யானையின் காதுக்குள் புகுந்த கட்டெறும்பைபோல அதிருப்தியை தந்துள்ளது - வைகைச்செல்வன்

Next Story