சட்டமன்றத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது - தலைமை நீதிபதி கருத்து


சட்டமன்றத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது - தலைமை நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 14 Jun 2018 1:48 PM GMT (Updated: 14 Jun 2018 1:48 PM GMT)

சட்டமன்றத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். #IndiraBanerjee

சென்னை,

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 190 பக்கங்களை 
கொண்ட தீர்ப்பினை வழங்கினார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியிருப்பதாவது:

* 1994ல் அதிமுக எம்எல்ஏ ஜி.விஸ்வநாதன், மதிமுகவுக்கு போனதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், கட்சி பொறுப்பை விட்டுக் கொடுக்க அவசியமில்லை, மறைமுகமாக செய்தாலும் தகுதி நீக்கம் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

* 18 எம்எல்ஏக்களும் சபாநாயகர் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாரபட்சமாக செயல்படுகிறார் என நிரூபிக்க தவறிவிட்டனர்.

* 18 எம்எல்ஏக்களும் பதிலளிக்க சபாநாயகர் வாய்ப்பு கொடுத்தார், ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

* 18 எம்எல்ஏக்களும் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என கட்சிக்குள் எழுப்பியதாக எந்த ஆதாரமும் இல்லை.

* முதலமைச்சராக வேறு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சபாநாயகரிடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவிக்கவில்லை.

* அரசியல் சாசனப் பிரிவு 212-ன்படி சட்டமன்றத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளில், சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தினாலேயே நீதிமன்றம் தலையிட முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story