மாநில செய்திகள்

செய்தித்துறையில் பணியாற்றும் 10 துணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு + "||" + Work in the newsroom Promotion to 10 Deputy Directors

செய்தித்துறையில் பணியாற்றும் 10 துணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு

செய்தித்துறையில் பணியாற்றும் 10 துணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு
தமிழக செய்தித்துறையில் பணியாற்றும் 10 துணை இயக்குனர்கள் இணை இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ.) துணை இயக் குனர் அந்தஸ்தில் பணியாற்றிய தா.மனோகரன் அதே துறையில் இணை இயக்குனராகவும், இந்து சமய அறநிலையத்துறையில் பி.ஆர்.ஓ.வாக துணை இயக்குனர் அந்தஸ்தில் இருந்த த.மருதப்பிள்ளை அதே துறையில் இணை இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

நெல்லை மாநகராட்சியில் பி.ஆர்.ஓ.வாக துணை இயக்குனர் அந்தஸ்தில் இருந்த எஸ்.கண்ணதாசன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணை இயக்குனராகவும் (பி.ஆர்.ஓ.), தமிழ்நாடு போக்குவரத்து கழகம்(விழுப்புரம்) பி.ஆர்.ஓ. வாக துணை இயக்குனர் அந்தஸ்தில் இருந்த க.இளந்திரையன் அதே துறையில் இணை இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கள விளம்பர பிரிவில் துணை இயக்குனராக இருந்த எஸ்.செல்வராஜ் மக்கள் தொடர்பு இணை இயக்குனராகவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பி.ஆர்.ஓ.வாக துணை இயக்குனர் அந்தஸ்தில் பணியாற்றிய ஆர்.நீலகண்டன் அதே துறையில் இணை இயக்குனராகவும், காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில்(பி.ஆர்.ஓ.) துணை இயக்குனர் ஆர்.சேகர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்பகோணம்) காரைக்குடி மண்டலத்தின்(பி.ஆர்.ஓ.) இணை இயக்குனராகவும், செய்தித்துறை துணை இயக்குனர் க.முத்துசாமி, நினைவகங்கள் இணை இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பி.ஆர்.ஓ.வாக துணை இயக்குனர் அந்தஸ்தில் பணியாற்றிய அ.உமாபதி அதே துறையில் இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின்(பி.ஆர்.ஓ.) துணை இயக்குனர் த.சரவணன் இணை இயக்குனராக(கள விளம்பரம்) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.