மாநில செய்திகள்

மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி + "||" + TN assures help to Center to set up AIIMS at Thoppur in Madurai

மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி

மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி
மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami #AIIMS

சென்னை,

மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தில் ஒரு இடத்தில் தொடங்குவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இப்போது மதுரையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

முதல்-அமைச்சர் பழனிசாமி பேசுகையில், சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையின்படி மத்திய குழு 5 இடங்களில் பார்வையிட்டது.  தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை பார்வையிட்டது. இப்போது மதுரையில் மருத்துவமனையை அமைப்படும் என்ற ஆணையை தமிழக சுகாதார செயலாளருக்கு அனுப்பியுள்ளது. 

மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும், 60 செவிலியர்களுக்கு இடம் கிடைக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். மதுரையில் எய்ம்ஸ் அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி என குறிப்பிட்டார்.