மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: ஆர்.சரத்குமார் வரவேற்பு


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: ஆர்.சரத்குமார் வரவேற்பு
x
தினத்தந்தி 20 Jun 2018 7:01 PM GMT (Updated: 20 Jun 2018 7:01 PM GMT)

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: ஆர்.சரத்குமார் வரவேற்பு

சென்னை, 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

3 வருடங்களுக்கு முன் 2015-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது மதுரை அருகே இடம் தேர்வு செய்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழகத்தில், மருத்துவக்கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் கிடைக்கவிருப்பது வரவேற்புக்குரியது. சிறந்த வான்வழி, நிலவழி போக்குவரத்து கொண்ட மத்திய, தென் தமிழக மக்கள் பெருமளவில் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் அமையவிருப்பது கூடுதல் சிறப்பு. இதற்கான அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசிற்கும், அதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொண்ட தமிழக அரசிற்கும் எனது பாராட்டுகளையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story