மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Express train service tomorrow

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வைகை, பல்லவன், திருச்செந்தூர், பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில் சேவையில் நாளை ஒரு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

வைகை, பல்லவன், திருச்செந்தூர், பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில் சேவையில் நாளை ஒரு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருகை தாமதம்

சென்னை வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ் பிரஸ், மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஆகியவை 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாகவும், திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாகவும், லோக்மான்யா திலக்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் தாமதாகவும் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்துசேரும்.

புறப்பாடு தாமதம்

சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு பதிலாக, 20 நிமிடங்கள் தாமதமாகவும், சென்னை- காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாகவும், சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகவும், செங்கல்பட்டு-காக்கிநாடா துறைமுகம் சர்கார் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டு செல்லும்.

இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.