பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைப்பு, டீசல் விலை 10 காசுகள் குறைப்பு


பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைப்பு, டீசல் விலை 10 காசுகள் குறைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2018 12:53 AM GMT (Updated: 26 Jun 2018 12:53 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல டீசல் விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.71.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice

சென்னை,

பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்தபடி இருந்தது. வெறும்10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது.  இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணை நிறுவனங்கள்  இந்த மாத தொடக்கத்திலிருந்தே தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.78.40 ஆகவும், டீசல் விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.71.12 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story