கால்பந்து என்றால் ரொனால்டோ-மெஸ்ஸி; தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க -அமைச்சர் ஜெயக்குமார்


கால்பந்து என்றால் ரொனால்டோ-மெஸ்ஸி; தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 26 Jun 2018 5:38 AM GMT (Updated: 26 Jun 2018 5:38 AM GMT)

உலகக்கோப்பை கால்பந்தில் ரொனால்டோ-மெஸ்ஸி இடையேதான் போட்டி. தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க இடையேதான் போட்டி என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முரண்பாடுகளின் மொத்த சின்னம் திமுக.  பேரவை விதிகள் குழுவை கூட்டி ஆளுநர் பற்றி பேச கூடாது என கூறியது திமுக தான். 
1999ஆம் ஆண்டில் தி.மு.க.தான் விதிகளை மாற்றியது என குற்றம்சாட்டினார். 
 கொள்கைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர். கதவுகளை மூடிய திமுகவினரே திறக்க கூறுகின்றனர்  ஆளுநருக்கு உள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு ஆய்வு செய்து வருகிறார் என கூறினார்.

ஆட்சியை பிடிப்போம் என்று கமல்ஹாசன் கூறியது பற்றிய கேள்வி பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் , உலகக்கோப்பை கால்பந்தில் ரொனால்டோ-மெஸ்ஸி இடையேதான் போட்டி.  தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க இடையேதான் போட்டி. வேறு யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறினார்.

Next Story