மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது


மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது
x
தினத்தந்தி 1 July 2018 5:41 AM GMT (Updated: 2018-07-01T11:11:23+05:30)

சென்னையில் மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மருத்துவ படிப்பு கலந்தாய்வு ஜூலை 1ந்தேதி தொடங்கும் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பான கால அட்டவணை மருத்துவ தேர்வுக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  இந்த நிலையில், இன்று சிறப்பு பிரிவில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில், சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்கள் பிரிவு மாணவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

Next Story