ஜிஎஸ்டியால் வரிக்கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. - தமிழிசை


ஜிஎஸ்டியால் வரிக்கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. - தமிழிசை
x
தினத்தந்தி 1 July 2018 11:20 AM GMT (Updated: 1 July 2018 11:20 AM GMT)

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையால் நாட்டில் வரிக்கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். #Tamilisai #BJP #GST

சென்னை,

உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி) முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது.

இந்தநிலையில் இது குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை கூறியதாவது:

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையால் நாட்டில் வரிக்கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

ஜிஎஸ்டியால் வரிக்கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மத்திய அரசு மக்கள் விரோதமாக செயல்படாது. தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவே எட்டு வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படுகிறது.

உள்நாட்டு பொருளாதாரம் வளர்ந்துள்ளது. உலக பொருளாதார தாக்கம் இங்கு இல்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும். மாநில அரசு வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story