நீட் தேர்வு: வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


நீட் தேர்வு:  வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
தினத்தந்தி 2 July 2018 8:16 AM GMT (Updated: 2 July 2018 8:16 AM GMT)

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஎஸ்இ.,க்கு நீதிபதிகள்  கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவை

* நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது? 

* நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில், தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.

* தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட ஆங்கில வார்த்தையை, தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் போது, என்ன வார்த்தை என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்கபட்டுள்ளதா?

* கல்வி என்பது அனைவருக்கு சமமாக இருக்க வேண்டும்.

* சிபிஎஸ்இ-க்கு இணையாக, தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு படம் கற்பிக்கப்படுகிறதா?

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Next Story