காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி முதல்-அமைச்சர் பழனிசாமி


காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 2 July 2018 12:01 PM GMT (Updated: 2018-07-02T17:31:40+05:30)

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி என்று முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy

சென்னை,

காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தநிலையில் காவிரி ஆணைய கூட்டம் தொடர்பாக  சட்டசபையில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்துக்கு 31.24 டிம்.எம்.சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  ஆகஸ்டுக்கு 45.9 டிஎம்.சி செப்டம்பருக்கு 36.76 டிம் எம் சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும்.  தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரிநீர் கிடைத்தே தீரும். வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம் என காவிரி ஆணைய தலைவரே கூறியுள்ளார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story