நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழக பக்தர்கள் பற்றி அறிய கட்டுப்பாட்டு அறை திறப்பு


நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழக பக்தர்கள் பற்றி அறிய கட்டுப்பாட்டு அறை திறப்பு
x
தினத்தந்தி 3 July 2018 4:15 PM GMT (Updated: 2018-07-03T21:45:22+05:30)

கைலாய மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்று கனமழையில் சிக்கியுள்ள இந்திய பயணிகளை பத்திரமாக மீட்டு வரும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.


புதுடெல்லி, 

இதற்கிடையே, தமிழக பக்தர்கள் பற்றிய விவரங்களை உறவினர்கள் தெரிந்துகொள்வதற்காகவும், அவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. உதவி தேவைப்படுகிறவர்கள் கட்டுப்பாட்டு அறையின் 011 21610285 மற்றும் 011 21610286 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் உதவி வரவேற்பு அதிகாரி ஆர்.பாண்டியன் (மொபைல் எண் 98685 30677), உதவி தொடர்பு அதிகாரி ஆர்.முத்து பாட்ஷா (99682 19303) ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம். 

மத்திய அரசும் நேபாளம் மற்றும் திபெத் பகுதியில் சிக்கியிருக்கும் பக்தர்கள் தொடர்பாக தகவல்களை தெரிந்துக்கொள்வதற்கு உதவி எண்களை அறிவித்துள்ளது. நேபாளத்தில் சிக்கியுள்ள பக்தர்களுக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் உதவும் வகையில் சேவையை தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களுக்கு அவர்களுடைய மொழியில் சேவையை பெறவும் நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழ் மொழியில் சேவையை பெற அதிகாரி ஆர் முருகனை (மொபைல் எண் +977 9808500642) தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story