இறந்த கன்றுகுட்டியை பிரிய மனமின்றி தவித்த நாய் - காண்போரை கண்கலங்க வைத்த பாச போராட்டம்

திருச்சியில் இறந்த கன்றுகுட்டியை பிரிய மனமின்றி தவித்த நாயின் பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்க செய்தது.
சென்னை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து இறந்த கன்றுகுட்டியை பிரிய மனமின்றி தவித்த நாயின் பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்க செய்தது.
கவுண்டம்பட்டியை சேர்ந்த சின்னதுரை என்பவரது 6 மாத கன்றுகுட்டி கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. இதை பார்த்த அவரது நாய் இறந்த கன்று குட்டியின் உடலை சுற்றி சுற்றி வந்தது.
கன்றுகுட்டி பிறந்தது முதல் அதனுடன் விளையாடி வந்த நாய், அதை புதைத்த போது அழுவது போன்று சத்தம் எழுப்பியது. கன்றுகுட்டி முழுவதுமாக புதைத்ததும் அதை தேடி நாய் அங்குமிங்கும் ஓடி அலைந்தது, காண்போரை நெகிழச் செய்தது.
Related Tags :
Next Story