3 நாட்கள் நடத்தப்பட்ட மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 62 சதவீத மாணவர்களுக்கு இடம்


3 நாட்கள் நடத்தப்பட்ட மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 62 சதவீத மாணவர்களுக்கு இடம்
x
தினத்தந்தி 5 July 2018 4:00 AM IST (Updated: 5 July 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்கள் நடத்தப்பட்ட மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 62 சதவீத மாணவர் களுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.

சென்னை, 

3 நாட்கள் நடத்தப்பட்ட மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 62 சதவீத மாணவர் களுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.

மருத்துவ கலந்தாய்வு

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் பிரிவு, விளையாட்டு பிரிவு என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. அதைத்தொடர்ந்து 2-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று 4-வது நாளாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்று முடிந்த கலந்தாய்வில் மாநில பாடத்திட்டம், மத்திய அரசின் பாடத்திட்டம் (சி.பி.எஸ்.இ.), இதர பாடத்திட்டத்தை படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எவ்வளவு பேர் இடஒதுக்கீடு பெற்று இருக்கின்றனர் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

3 நாட்களில்...

அதாவது, 3 நாட்கள் நடைபெற்று முடிந்து இருக்கும் மருத்துவ படிப்பு கலந்தாய்வில் முதல் நாளில் அரசு மருத்துவக்கல்லூரியில் 38 எம்.பி.பி.எஸ். இடங்களும், 2 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின.

2-ந்தேதி அரசு மருத்துவக்கல்லூரியில் 572 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி கல்லூரியில் ஒரு எம்.பி.பி.எஸ். இடம் என மொத்தம் 573 இடங்களும், 3-ந்தேதி அரசு மருத்துவக்கல்லூரியில் 719 எம்.பி.பி.எஸ். இடங்களும், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் 29 இடங்களும், சுயநிதி கல்லூரியில் 59 இடங்களும் என மொத்தம் 807 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

மாநில பாடத்திட்ட மாணவர்கள்

ஆக மொத்தம் 3 நாட்களில்(கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை) 1,418 எம்.பி.பி.எஸ். இடங்களும், 3 பி.டி.எஸ். இடங்களும் என 1,421 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 892 மாணவர்களுக்கும்(62.77 சதவீதம்), மத்திய அரசு பாடத்திட்டத்தில் படித்த 460 மாணவர்களுக்கும்(32.37 சதவீதம்), இதர பாடத்திட்டத்தில் படித்த 69 மாணவர்களுக்கும்(4.9 சதவீதம்) இடம் கிடைத்து இருக்கின்றன.

Next Story