தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 70 இடங்களில் வருமான வரி சோதனை


தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 70 இடங்களில் வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 5 July 2018 5:14 AM GMT (Updated: 2018-07-05T10:44:15+05:30)

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை :

கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை, சத்துமாவு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகிறது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூரில் சத்துமாவு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம்  குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு  சத்துமாவு, முட்டை விநியோகம் செய்யும் பணியை  செய்து வருகிறது.

இதே போன்று நாமக்கல், கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story