கமல், ரஜினி என யார் வந்தாலும் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது - அமைச்சர் ஜெயக்குமார்


கமல், ரஜினி என யார் வந்தாலும் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 5 July 2018 6:29 AM GMT (Updated: 2018-07-05T11:59:28+05:30)

கமல், ரஜினி என யார் வந்தாலும் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #Kamal #Rajini

சென்னை

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். தமிழகத்தில், வளர்ச்சியை கொண்டு வருவார்கள் என கூறினார். 

இது குறித்த கேள்விக்கு  பதில்  அளித்த அமைச்சர் ஜெயக்குமார்   கமல், ரஜினி என யார் வந்தாலும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. தமிழகத்தில் வறட்சியைதான் கொண்டு வருவார்கள் என கூறினார். ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறார் என கூறினார்.

Next Story