சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்


சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்
x
தினத்தந்தி 5 July 2018 11:00 PM GMT (Updated: 2018-07-06T03:18:03+05:30)

சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(வண்டி எண்:6001) ஆகஸ்டு 3, 17, 24, 31 மற்றும் செப்டம்பர் 7, 21 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் (6002) செப்டம்பர் 2, 9, 23 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(6005) ஆகஸ்டு 3, 31 மற்றும் செப்டம்பர் 7, 21 ஆகிய தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கத்தில் (6006), ஆகஸ்டு 12 மற்றும் செப்டம்பர் 2, 9, 23 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

சென்னை-நாகர்கோவில்

சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(6007) ஆகஸ்டு 7, 14, 28 மற்றும் செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் (6008) ஆகஸ்டு 8, 22, 29 மற்றும் செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

இந்த தகவல் தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story