குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் மீது வழக்குப்பதிவு


குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ்  மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 July 2018 12:12 PM GMT (Updated: 2018-07-06T17:42:23+05:30)

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மீது குடி போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரின் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். #Bharathiraja #Manoj

சென்னை

இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ், தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி, சமுத்திரம்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மனோஜ்  நுங்கம்பாக்கம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஸ்டெர்லிங் ரோட்டில் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மனோஜ்குமார் வாகனத்தை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

இதில் அவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Next Story