முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை அமைச்சர் ஜெயக்குமார்


முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 6 July 2018 8:55 PM IST (Updated: 6 July 2018 8:55 PM IST)
t-max-icont-min-icon

முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #Jayakumar

சென்னை,

முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அசோக் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் அங்காடியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.  அதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சோதனை நடத்த  வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது. வரிஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சோதனையில் மாநில அரசை தொடர்பு படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story