மாநில செய்திகள்

திருவள்ளூர்: சோழவரம் அருகே சந்தேகத்திற்கிடமான 40 பேரை பிடித்து போலீசார் விசாரணை + "||" + Thiruvallur: Police arrested 40 suspects near Cholavaram

திருவள்ளூர்: சோழவரம் அருகே சந்தேகத்திற்கிடமான 40 பேரை பிடித்து போலீசார் விசாரணை

திருவள்ளூர்: சோழவரம் அருகே சந்தேகத்திற்கிடமான 40 பேரை பிடித்து போலீசார் விசாரணை
திருவள்ளூர் அருகே சோழவரம் பகுதியில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் சந்தேகத்திற்கிடமான 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,

சென்னையில் கடந்த சில வாரங்களாக செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு உட்பட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

இந்த நிலையில், திருவள்ளூர் சோழவரம் பகுதியில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில்  சந்தேகத்திற்கிடமான 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சோலையம்மன் நகர், ஆட்டந்தாங்கல்  ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சந்தேகத்திற்கிடமான 40 பேர் பிடிபட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த ரவுடிகள் புறநகரில் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்துள்ளனர்.