மொய் கொடுப்பது போல் நடித்து பண மோசடி - 7 பேர் கைது


மொய் கொடுப்பது போல் நடித்து பண மோசடி - 7 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2018 1:27 PM IST (Updated: 7 July 2018 1:27 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே திருமண நிகழ்ச்சியில் மொய் கொடுப்பது போல் நடித்து மோசடி செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

மதுரை மாவட்டம் பரவை என்னும் இடத்தில், ராஜசேகரன் என்பவரது திருமண வீட்டில் மொய் எழுதிக் கொண்டிருந்தவரிடம் சில்லறை கேட்டு ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தேகமடைந்த திருமண வீட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, நடத்திய விசாரணையில், திருமண விழாக்களில் இது போன்ற பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story