கிராமப்புற குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு தற்போது அதிகரித்து வருகிறது - வெங்கய்யா நாயுடு கவலை


கிராமப்புற குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு தற்போது அதிகரித்து வருகிறது - வெங்கய்யா நாயுடு கவலை
x
தினத்தந்தி 7 July 2018 11:51 AM GMT (Updated: 7 July 2018 11:51 AM GMT)

கிராமப்புற குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு தற்போது அதிகரித்து வருகிறது என்று வெங்கய்யா நாயுடு கவலை தெரிவித்துள்ளார். #VenkaiahNaidu

சென்னை,

கண் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார்.

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறந்த மருத்துவர்களுக்கான விருதினை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

நகர்புற குழந்தைகளிடம் காணப்பட்ட பார்வை குறைபாடு தற்போது கிராம புறங்களிலும் அதிகரித்து வருகிறது.  மக்களிடம் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைக்கு மாறியதே இதற்கு காரணம்.   மீண்டும் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் ஜெய்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story