முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை


முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 8 July 2018 2:54 AM GMT (Updated: 2018-07-08T08:24:52+05:30)

முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்தவர் ப. சிதம்பரம்.  இவரது வீடு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது.  இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்கு சென்றுள்ளளனர்.

அவரின் வீட்டில் இருந்து ரூ.1.10 லட்சம் பணம், தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.  இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story