மாநில செய்திகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்:அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக அமைந்து விடும்மு.க.ஸ்டாலின் பேட்டி + "||" + Constitution of law Could well become hostile Interview with MK Stalin

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்:அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக அமைந்து விடும்மு.க.ஸ்டாலின் பேட்டி

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்:அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக அமைந்து விடும்மு.க.ஸ்டாலின் பேட்டி
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக அமைந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, 

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக அமைந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ஒரே நாடு, ஒரே தேர்தல்

கேள்வி:-ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறது. அ.தி.மு.க.வும் அதே நிலைபாட்டில் இருக்கிறது. இப்போது மத்திய அரசு கொண்டு வரக்கூடிய இந்த திட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:-ஆளுங்கட்சியினுடைய நிலைப்பாட்டை பற்றி எல்லாம் நான் பேசுவதற்கு தயாராக இல்லை. தி.மு.க.வின் நிலைப்பாடு என்பது இந்த அறிவிப்பு ஒரு தவறான செயல் என்பது தான். இது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக அமைந்துவிடும். ஏற்கனவே, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இதே முயற்சியில் அன்றைக்கும் ஈடுபட்டார். ஆனால் அது சரியாக வராது என்று அப்பொழுதே இந்த திட்டம் கைவிடப்பட்டது.

ஆகவே, இப்பொழுது அதை ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையிலே கொண்டு வர வேண்டுமென்ற முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே அது தவறு, என்பதை சுட்டிக் காட்டி தி.மு.க. சார்பில் எங்களுடைய எம்.பி. திருச்சி சிவா டெல்லி சென்று நான் எழுதிய கடிதத்தைக் கொடுத்து விட்டு அங்கே விளக்கமாக பேசிவிட்டு வந்திருக்கிறார்.

அச்சுறுத்தல்

கேள்வி:-18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நீதிபதிக்கே அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் எல்லாம் வெளிவருகிறதே?

பதில்:-அந்த தீர்ப்பினை வழங்கிய நீதிபதி சுந்தருக்கு மட்டும் வந்திருக்கும் மிரட்டலாக நான் அதை கருதவில்லை. மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் சத்திய நாராயணனுக்கு கூட அது மிரட்டலாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கும் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி:-மாநில சுயாட்சி மாநாடு தொடர்பாக தேசிய தலைவர்களுக்கு எல்லாம் தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதே?

பதில்:-மாநில சுயாட்சி மாநாடு குறித்து ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டு, இப்பொழுது அதற்கான முயற்சிலே ஈடுபட்டிருக்கிறோம். அதெல்லாம் முடிந்ததற்கு பிறகு எந்த தேதி? எந்த இடம்? என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...