பாலபாரதி கைது ஏன்?- சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்


பாலபாரதி கைது ஏன்?- சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 9 July 2018 6:23 AM GMT (Updated: 2018-07-09T11:53:36+05:30)

பாலபாரதி கைது ஏன்? என்பது குறித்து சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #TNAssembly #Edappadipalanisamy

சென்னை

பாலபாரதி  கைது ஏன்? என்பது  சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

பார்வையிட செல்கிறோம் எனக்கூறி 8 வழிச்சாலை பற்றி மக்களிடம் சில கருத்தை தெரிவித்துள்ளார்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலபாரதி உட்பட 14 பேரை போலீஸ் கைது செய்தது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படுகின்றனர்; வாய்ப்பூட்டு போட்டிருந்தால் இப்படி சுதந்திரமாக பேச முடியாது.

8 வழிச்சாலை திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்று சிலர் வேண்டுமென்றே செயல்பட்டு வருகின்றனர். பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்திற்கான திட்டம் போன்று தவறான தகவல் பரப்பப்படுகிறது. 8 வழிச்சாலையால் மேற்கு மாவட்டங்கள் முழுவதும் பயன்பெறும்.  பசுமை வழிச்சாலை அமைக்க, அரசியல் கட்சியினர் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் . திமுக ஆட்சியிலும் புதிய சாலைகள் அமைக்க,  நிலம் கையகப்படுத்துதல் நடந்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story