2016 -ல் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி கூட்டுறவு வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் கண்டு பிடிப்பு


2016 -ல் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி கூட்டுறவு வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் கண்டு பிடிப்பு
x
தினத்தந்தி 9 July 2018 7:17 AM GMT (Updated: 9 July 2018 7:17 AM GMT)

சத்துமாவு நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட் செய்துள்ளதை வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #ITRaid #IncomeTax #Christy

சென்னை

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகளை, திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஷ்டி பிரைடு கிராம் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் சத்துணவு முட்டை வினியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் வீடு, இந்த தனியார் நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்கும் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த ஆடிட்டர் ராமச்சந்திரனின் வீடு ஆகிய இடங்களில்  கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த நிலையில் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று 4-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நீடித்தது. மேலும் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையும் நடைபெற்றது. 

இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதேபோல தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வந்த வங்கி லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என தெரிகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகே இது குறித்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

இன்று 5 வது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில்  2016-ல் கிறிஸ்டி நிறுவன உரிமையானர் குமாரசாமி கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.250  கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சத்துமாவு நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதை வருமானவரித்துறையினர் சோதனையில் கண்டு பிடித்து உள்ளனர். 

Next Story