மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் + "||" + Jayalalithaa's command is the charter of the bahubali dialogue Speaking OPS

ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்

ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்
சட்டசபையில் ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனம் பேசிய ஓ.பன்னீர் செல்வம். #OPS #Jayalalithaa #Bahubali
சென்னை

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நிறைய முக்கியமான விஷயங்கள் நடந்தது. அதன்படி, இன்று சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் அதன் மீதான விவாதமும் நடைபெற்றது.

இந்த விவாதத்திற்கு பின் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்தும் பேசினார். அதேபோல் சேலம் 8 வழி குறித்தும் பேசினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிநடத்திய கட்சி இது. அவரின் வழியை பின்பற்றித்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம். நமக்கு சிலர் துரோகம் செய்துவிட்டனர். நமக்கு துரோகம் செய்தவர்களை, நாமே சூரசம்காரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் கட்டளை படி எதிரிகளை அழிக்க வேண்டும். ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனத்தை பேசி பேச்சை முடித்தார்


அதிகம் வாசிக்கப்பட்டவை