பிளாஸ்டிக் பொருட்கள் தடை: அமல்படுத்துவதை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்


பிளாஸ்டிக் பொருட்கள் தடை: அமல்படுத்துவதை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 9 July 2018 6:31 PM GMT (Updated: 2018-07-10T00:01:20+05:30)

தமிழகத்தில் 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்கவோ மற்றும் தயாரிக்கவோ தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்கவோ மற்றும் தயாரிக்கவோ தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அந்த திட்டத்தை செம்மையான முறையில் அமல்படுத்துவதை கண்காணிப்பதற்காக தமிழகம் முழுவதும் மண்டல ரீதியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளராக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் நசி முதின் ஆணை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை மண்டலத்தில் வரும் சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், விழுப்புரம் மற்றும் கடலூர், சேலம் மண்டலத்தின் கீழ் வரும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக பி.அமுதா, கோவை மண்டலத்தின் கீழ் வரும் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நீலகிரி மற்றும் திருச்சி மண்டலத்தின் கீழ் வரும் திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக சந்தோஷ்பாபு, நெல்லை மண்டலத்தின் கீழ் வரும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் மதுரை மண்டலத்தின் கீழ் வரும் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக ராஜேந்திர ரத்னு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி கமி‌ஷனர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story