தமிழக மீனவர்களுக்கு ரூ.1,500 கோடியில் ஆழ்கடல் மீன்பிடி படகு பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


தமிழக மீனவர்களுக்கு ரூ.1,500 கோடியில் ஆழ்கடல் மீன்பிடி படகு பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 9 July 2018 8:30 PM GMT (Updated: 2018-07-10T00:13:27+05:30)

தமிழக மீனவர்களை கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருகின்றனர்.

சென்னை, 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

தமிழக மீனவர்களை கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு இருந்த அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது கூட ஆறுதல் சொல்லவில்லை.

ஆனால் மோடி பிரதமராக பதவி ஏற்றவுடன் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், அவர்களின் வாழ்க்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்தார். தமிழக மீனவர்களுக்காக ரூ.1,500 கோடியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் வசதி கொண்ட படகுகள் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் மீனவர்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘அமித்ஷா எந்த மாநிலங்களில் காலடி எடுத்து வைக்கிறாரோ? அங்கு எல்லாம் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. எனவே தமிழ்நாட்டிலும் பா.ஜ.க. ஆட்சி அமையும். தாமரை மலர்ந்தே தீரும். தமிழகம் காவிக்கோட்டையாக மாறும்’ என்றார்.

Next Story