சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு திடல் உள்ளது? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு திடல் உள்ளது? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 9 July 2018 9:45 PM GMT (Updated: 2018-07-10T00:59:19+05:30)

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் தான் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க முடியும். ஆனால் தமிழக அரசு இதுகுறித்து கவனம் செலுத்துவது இல்லை.

சென்னை, 

இந்தியாவிலேயே உடற்கல்விக்கான பல்கலைக்கழகம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. ஆனால், பல பள்ளிகளின் விளையாட்டு திடலும் இல்லை. விளையாட்டு ஆசிரியர்களும் இல்லை. இதை தமிழக அரசோ, சி.பி.எஸ்.இ. நிர்வாகமோ கண்டு கொள்வது இல்லை. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வியை பயிற்றுவிப்பது தொடர்பாக விதிகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு திடல் உள்ளிட்ட உடற்கல்விக்கான வசதிகள் உள்ளன? என்பது குறித்து 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story