மாநில செய்திகள்

சுவாச குழாயில் சிக்கிய இரும்பு ‘நட்டு’ ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை + "||" + Sink iron in the respiratory tube

சுவாச குழாயில் சிக்கிய இரும்பு ‘நட்டு’ ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சுவாச குழாயில் சிக்கிய இரும்பு ‘நட்டு’ ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
ஆந்திர கட்டிட தொழிலாளியின் சுவாச குழாயில் சிக்கிய இரும்பு நட்டை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அகற்றினர்.
சென்னை, 

ஆந்திர கட்டிட தொழிலாளியின் சுவாச குழாயில் சிக்கிய இரும்பு நட்டை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அகற்றினர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் ஜோஜப்பா (வயது 54). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி பணி செய்யும் இடத்தில் தனது வாயில் ‘நட்டு’ வைத்து இரண்டு கையால் வேலை செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாயில் இருந்த நட்டை விழுங்கி விட்டார்.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை, உடன் வேலை செய்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு இருந்த டாக்டர்கள், ஜோஜப்பாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது சுவாச குழாயில் இரும்பு ‘நட்டு’ சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அறுவை சிகிச்சை செய்து அந்த இரும்பு நட்டை எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் 26-ந்தேதி ஜோஜப்பாவுக்கு பேராசிரியர் டாக்டர் ஆர்.முத்துகுமார் தலைமையில் 7 டாக்டர்கள் கொண்ட குழு 1 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சை குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ‘டீன்’ ஜெயந்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய முடியாது என்று கூறிய நிலையில் ஜோஜப்பா சென்னை கொண்டு வரப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்தனர். சுவாச குழாயில் இரும்பு பொருள் சிக்கியதால் மயக்க மருந்து மூச்சு வழியாக கொடுக்காமல் நரம்பு வழியாக கொடுத்து ஆபரேஷன் செய்தனர்.

முதலில் சுவாச குழாய் வழியே ‘பிரான்கோஸ்கோபி’ கருவி மூலம் எடுக்க முயற்சி செய்யப்பட்டது. அப்போது இரும்பு நட்டு குரல் வளையில் சிக்கிக்கொண்டது. பின்னர் தொண்டையில் சிறு துளையிட்டு அந்த நட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.