மும்பையில் இருந்து சென்னை வழியாக மதுரை செல்லும் விமானம் நாளை முதல் செப்டம்பர் மாதம் வரை ரத்து

மும்பையில் இருந்து சென்னை வழியாக மதுரை செல்லும் விமானம் நாளை முதல் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்படுகிறது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திற்கு தினமும் காலை 11 மணிக்கு மும்பையில் இருந்து வரும் ஏர்–இந்தியா விமானம் காலை 11.30 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு செல்லும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த விமான சேவை நாளை (வியாழக்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் வரை நிறுத்தப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்திற்கு செல்லும் பயணிகளுக்காக விமானங்கள் இயக்கப்படுவதால் சில தடங்களில் விமானங்களை ரத்து செய்து அங்கு பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story