டார்ஜிலிங்கில் சினிமா படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்


டார்ஜிலிங்கில் சினிமா படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்
x
தினத்தந்தி 12 July 2018 3:00 AM IST (Updated: 12 July 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். அவருடன் படப்பிடிப்பு குழுவினரும் சென்று இருந்தனர்.

அங்கு சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் நேற்று இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

சினிமா படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த், வரும் நாட்களில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Next Story