மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த வித மாற்றமும் இல்லை + "||" + There is no change in petrol and diesel prices today

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த வித மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த வித மாற்றமும் இல்லை
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.82-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 72.33-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
சென்னை,

சுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதத்திற்கு இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு இம்முறை கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதனிடையே பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்தபடி இருந்தது. வெறும்10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது. 

மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. ஜூன் மாத இறுதியிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.82-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 72.33-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.