முட்டை கொள்முதல் முறைகேடு: டிடிவி தினகரன் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு -அமைச்சர் ஜெயக்குமார்


முட்டை கொள்முதல் முறைகேடு:  டிடிவி தினகரன் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 12 July 2018 8:49 AM GMT (Updated: 2018-07-12T14:19:14+05:30)

முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #TTVDinakaran #Jayakumar

சென்னை

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என்ற உயர்நீதிமன்ற கருத்துக்கு உரிய பதில் அளிக்கப்படும்.

கோயில் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும். கடத்தல் சிலைகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும். முட்டை கொள்முதலையும் வருமான வரி சோதனையும் தொடர்புபடுத்தக்கூடாது. முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.முட்டை கொள்முதலையும், வருமானவரி சோதனையையும் தொடர்புபடுத்தக்கூடாது 

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் அனைவரும் மீட்கப்படுவர் 

முட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததா இல்லையா என்பதே தற்போதைய கேள்வி. சிஏஜி அறிக்கைகள் திமுக ஆட்சிக்காலத்திலும் வெளியாகியுள்ளது இவ்வாறு அவர் கூறினார்

Next Story