விதிமீறல் கட்டிடங்களை இடிக்க தவறிய சென்னை சிஎம்டிஏவை ஏன் கலைக்க கூடாது? ஐகோர்ட்டு கேள்வி


விதிமீறல் கட்டிடங்களை இடிக்க தவறிய சென்னை சிஎம்டிஏவை ஏன் கலைக்க கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 12 July 2018 7:02 PM IST (Updated: 12 July 2018 7:02 PM IST)
t-max-icont-min-icon

விதிமீறல் கட்டிடங்களை இடிக்க தவறிய சென்னை சிஎம்டிஏவை ஏன் கலைக்க கூடாது? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் விதிமீறி கட்டப்பட்ட 6 மாடி கட்டிடத்திற்கு சீல் வைக்க கோரிய வழக்கில் ஐகோர்ட்டு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு போலீசார் பாதுகாப்பு தரவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2015 வெள்ளத்தில் இருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை, ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் பணம் பெறுவதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகின்றன என ஐகோர்ட்டு வேதனையை தெரிவித்துள்ளது. நேற்று ஒருநாள் பெய்த மழைக்கே சென்னை மிதக்கிறது என கூறியுள்ள ஐகோர்ட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய பகுதிகளில் விதிமீறல்களை எப்படி தடுக்க போகிறீர்கள்? எனவும் கேள்வியை எழுப்பியுள்ளது. 

Next Story